மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தொழுகை நடத்தும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என்று காவல் துறையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், மதுரை காவல் ஆணையர் மற்றும் திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகார் மனுவின் விவரம்: ‘திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பில் யாரும் தொழுகை நடத்த தடை விதிக்க மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து வழக்கும், மலை மீது ஆடு, கோழி போன்ற அசைவ உணவு சமைக்கவும், கொண்டு செல்லவும் தடை விதிக்க கோரிய வழக்கும் உள்ளிட்ட இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.