அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் முதல் மாடிக்கு செல்வதற்கு வசதியாக 2 லிப்ட் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதையடுத்து கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வியாபாரிகளின் வசதிக்காக 64 லட்சம் மதிப்பில் 2 லிப்ட் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வியாபாரிகளுக்காக 64 லட்ச ரூபாய் மதிப்பில் பூ மார்க்கெட்டில் 2 லிப்ட் கட்டுவதற்கு உண்டான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 2 லிப்ட் அமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.