படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிக்கும்: அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தகவல்

1 day ago 4

வாஷிங்டன்: படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிக்கும் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராயச்சியாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆராய்ச்சியாளர்கள், செல்போன்களை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வானது செல்போன்களை அதிகமாக பயன்படுத்தும் 1,22,000 பேரிடம் நடத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இவர்களில் 41 சதவீதம் பேர் தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தும் நபர்களாகவும், 17.4 சதவீதம் பேர் அந்த நேரத்தில் தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர். அந்த நேரத்தில், தொலைபேசிகளைப் பயன்படுத்தாதவர்களை விட, பயன்படுத்தியவர்களுக்கு தூக்கப் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக இருந்தது. கண் பார்வைக்கான மெலடோனின் என்ற ஹார்மோன் தூக்கத்தையும் விழிப்பையும் சீராக்க உதவுகிறது.

தொலைபேசி அல்லது பிற டிஜிட்டல் திரையிலிருந்து வெளியாகும் வெளிச்சம், மெலடோனின் வெளியீட்டை தாமதப்படுத்துகிறது. இதன் விளைவாக இயற்கையான தூக்கம் பாதிக்கப்படுகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதால், தூக்கக் கோளாறுகள் மற்றும் அமைதியற்ற தூக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பு 1.62 மடங்கு அதிகமாக இருக்கும். தூக்கமின்மை ஒரு நபரின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தினசரி வாழ்க்கையின் செயல்பாடு, நினைவாற்றல், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் கவனத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களை
பாதிக்கிறது.

இதே நிலை நீடித்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் செல்போன்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருந்தால், வாரத்திற்கு சுமார் 50 நிமிட தூக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களின் மூளையும் பாதிக்கப்படலாம். மேலும் இந்த பழக்கமானது மனித உடலின் உயிரியல் கடிகாரத்தையே சீர்குலைத்துவிடும்’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிக்கும்: அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article