விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரில் இன்றுமார்ச் 30) விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதரபாத் – டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் வழக்கம்போல் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அனிகேத் வர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். கிளாசன் 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 18.4 ஓவரில் ஹைதரபாத் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 164 ரன்களை துரத்திய டெல்லி அணி அதிரடியாக விளையாடி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டு பிளெசிஸ் 50 ரன்களும், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 38 ரன்களும், அபிஷேக் போரெல் 34 ரன்களும் எடுத்தனர். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
The post 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி அணி! appeared first on Dinakaran.