திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது: போலீஸுடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு

2 weeks ago 5

மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லவிருந்த பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிமை போலீஸார் கைது செய்தனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாஜகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காக பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று (சனிக்கிழமை) காலையில் செல்லவிருந்தார். அப்போது ஜெய்ஹிந்த்புரத்தில் விடுதியில் தங்கியிருந்தவரை மலைக்கு செல்லக்கூடாது என போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Read Entire Article