“திருப்பரங்குன்றம் படிப்பாதையில் அசைவ உணவு சாப்பிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” - ஜான் பாண்டியன்

3 hours ago 2

பழநி: திருப்பரங்குன்றம் படிப்பாதையில் அசைவ உணவு சாப்பிட்டோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

பழநி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடக்கக் கூடாத ஒன்று நடக்கிறது. மதக் கலவரத்தை தூண்டினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறும் திமுக அரசு, அங்குள்ள படிப்பாதையில் அசைவ உணவு சாப்பிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன்? இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

Read Entire Article