திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயம் அடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊமச்சி வலசு பகுதியைச் சேர்ந்த குருராஜ் என்ற மாணவர் மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: சிகிச்சை பெற்று வந்த மாணவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.