திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள்அதிகாரிகள் ஆலோசனை

3 weeks ago 5

திருப்பரங்குன்றம், அக். 24:முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், வருகின்ற நவ.2ம் தேதி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. இந்த விழா நவ.8 ம் தேதி நிறைவடைகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர், கோயில் துணை ஆணையர் சூரிய நாரயணன், போலீஸ் உதவி ஆணையர் குருசாமி, மண்டல தலைவர் சுவிதா விமல், தாசில்தார் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கந்த சஷ்டி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி விரதமிருப்பர் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், தங்குமிடம், நடமாடும் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தருவது, போக்குவரத்து மாற்றம், பக்தர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

The post திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகள்அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article