
திருப்பத்தூர்,
மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் செந்தூரப் பாண்டியன் பதிவாளர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் முத்திரை கட்டணத்தை குறைவாக வசூலித்து ரூ. 1.34 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செந்தூர் பாண்டியன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாத நிலையில், அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரது உறவினர்கள் முன்னிலையில் வீடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிழவி வருகிறது.