
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை) உள்ள ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.