
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள சிலைக்கு ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் சிலைக்கு மரியதை செலுத்திய பின் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:_
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என விரும்புகின்றனர். ஜெயலலிதா இருந்தவரை கட்சியை உச்சத்தில் நிலை நிறுத்தினார். ஜெயலலிதா மறைந்தபின் சூழ்ச்சி, நம்பிக்கை, துரோகம், வஞ்சகம் உள்ளிட்டவற்றை நாம் பார்த்தோம். ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என சிலர் செயல்பட்டதால் அதிமுக தொடர் தோல்விக்கு காரணம். இருமொழிக் கொள்கையைத்தான் தமிழ்நாடு மக்கள் விரும்புகிறார்கள். மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றார்.