
சென்னை,
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்று குணமடைந்து, தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், சினிமாவில் சிறந்த ஹீரோயின் யார்? என்று கேட்டார். அதற்கு சமந்தா, 'உள்ளொழுக்கு படத்தில் பார்வதி, சூக்சம தர்ஷினியில் நஸ்ரியா, அமரனில் சாய்பல்லவி, ஜிக்ராவில் ஆலியா பட் மற்றும் சி.டி.ஆர்.எல்-ல் அனன்யா பாண்டே' என்றார்.
மேலும், 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தில் கனி மற்றும் திவ்ய பிரபா அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களின் அடுத்த படத்தை எதிர்பார்த்திருக்கிறேன்' என்றும் கூறினார்.