திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா

4 hours ago 2

திருப்பதி,

1989-ல் வெளியான 'இந்து' திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரபு தேவா. இவர் நடிகரும் நடன இயக்குனருமான இவர் "காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ" என பல்வேறு படங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது 'மைக்கேல் முசாசி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இந்த நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபுதேவா அவரது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபுதேவாயுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Read Entire Article