திருப்பதியில் 5ம் நாள் பிரமோற்சவ விழா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்த மலையப்ப சுவாமி

3 months ago 20

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. பிரமோற்சவத்தின் 5ம் நாள் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்னும் பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்து எடுத்த அமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு பெண் வேடத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் தோன்றி அமிர்தத்தை தேவர்களுக்கு கிடைக்க செய்தார்.

இந்த அவதாரத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அலங்காரத்தில் மாய மோகத்தை போக்கும் விதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் நாச்சியர் திருகோலத்தில் உள்ள தனது உருவத்தை கிருஷ்ணராக தோன்றி அவரது அழகை அவரே ரசித்து வருவதாக மற்றொரு பல்லக்கில் நாட்சியாருடன் கிருஷ்ணரும் அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி தங்க, வைர, பச்சை மரகதம் கற்கள் பதிக்கிப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

* திருப்பதியில் இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள் பாலிக்க உள்ளார்.

The post திருப்பதியில் 5ம் நாள் பிரமோற்சவ விழா கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்த மலையப்ப சுவாமி appeared first on Dinakaran.

Read Entire Article