கின்ஷாசா: மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜனவரி 21-ம் தேதி தொடங்கிய இந்த தொற்றுநோய்க்கு 419 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நோயாளிகள் அறிகுறிகள் தோன்றிய 48 மணி நேரத்திற்குள் உயிரிழந்தனர்.
கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவில் இந்த விலங்கு வழி நோய் வெடிப்புகள் 60% க்கும் அதிகமாக அதிகரித்து வருவதால், இதுபோன்ற நோய்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பெருகிய முறையில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது.
பிப்ரவரி 9 அன்று போமேட் நகரில் இந்த அறியப்படாத நோயின் இரண்டாவது தொற்றுநோய் தொடங்கியது. 13 நோயாளிகளின் மாதிரிகள் தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தேசிய உயிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அனைத்து மாதிரிகளிலும் எபோலா அல்லது மார்பர்க் போன்ற பொதுவான ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்களுக்கான எதிர்மறை முடிவுகள் வந்துள்ளன. சிலவற்றில் மலேரியா இருப்பது உறுதி செய்யப்படுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
The post காங்கோ நாட்டின் வடமேற்கு பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பலி..! appeared first on Dinakaran.