திருப்பதி ஏழுமலையான் கோவில் தங்கக்கொடி மரம் சேதம்

1 month ago 12

திருப்பதி,

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று (அக். 4) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 12ம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த நிலையில், கொடியேற்றத்துக்கான கயிறை கொடிமரத்தின் உச்சியில் பொருத்தும் பணியின்போது தங்கக்கொடி மரத்தின் வளையம் உடைந்ததாகவும், அதனை சரிசெய்யும் பணியில் தேவஸ்தான அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தங்கக்கொடி மரம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Read Entire Article