திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன முறைகளை மேம்படுத்த நடவடிக்கை

1 day ago 4

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஷியாமளா ராவ் டி.சி.எஸ். தகவல் தொழில் நுட்ப பிரிவு பிரதிநிதிகள், திருப்பதி தேவஸ்தான தகவல் தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகள், கூடுதல் செயல் அலுவலர் வெங்கையாசவுத்ரி ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், திவ்ய தரிசனம் போன்ற தரிசன வரிசைகளில் தரிசன முறைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்துப் பேசி ஆலோசனை வழங்கினார். மேலும் திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் சரியான நேரத்தில் தரிசிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

'கியூ ஆர்' குறியீடுகள், முக அடையாளம் அறியும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பக்தர்களின் சோதனைகளை விரைவாக செய்ய கைமுறையை நீக்க வேண்டும், பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்துக்குள் தரிசனம் செய்ய வர வேண்டும், என்பதை தேவஸ்தான அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

டி.சி.எஸ். நிறுவன பிரதிநிதிகள், தரிசன வரிசையில் நுழைவு முதல் கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் காத்திருப்பு, தரிசனத்துக்குப் பின் வெளியேறும் வரை பக்தர்கள் செலவழிக்கும் நேரம் குறித்து குறும்படம் மூலம் விரிவானத் தொகுப்பை வழங்கினர். இதையடுத்து தொழில்நுட்பம் மூலம் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்க, அடிக்கடி கூட்டங்களை நடத்தவும், முன்னேற்றம் கொண்ட செயல்திட்டத்தை உருவாக்கவும் அதிகாரி உத்தரவிட்டார்.

Read Entire Article