
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உலக மக்கள்தொகை தினத்தில் மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல்:
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது; அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குகிறது; நிலையான வளர்ச்சியை வென்றுள்ளது.
ஆனால், பதிலுக்கு நமக்கு என்ன கிடைத்தது? குறைவான இடங்கள். குறைவான நிதி. நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் குரல். ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானதைச் செய்தது. தமிழ்நாடு டெல்லியை அச்சுறுத்துகிறது.
இன்னும் மோசமானது என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டுடன் அல்ல, டெல்லியுடன் நிற்கிறார்கள். அவர்கள் நமது முன்னேற்றத்திற்காக நம்மைத் தண்டிக்கும் நியாயமற்ற தொகுதிகள் மறுவரையறையை ஆதரிக்கிறார்கள்.
ஆனால் நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்: தமிழ்நாடு தலைவணங்காது. நாம் ஒன்றாக எழுகிறோம் - இது ஓரணி vs டெல்லி அணி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.