திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1.72 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

2 months ago 11

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 நாட்களில் 1,72,565 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சனிக்கிழமை 88 ஆயிரத்து 76 பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமை 84 ஆயிரத்து 489 பக்தர்களும் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 565 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான சாமி தரிசனம் எளிமையாக்கப்பட்டன. இதன் மூலம் தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்த நேரமும் குறைந்தது.

ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களின் சேவையைப் பயன்படுத்தி வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு காலை உணவு, பால் மற்றும் குடிநீர் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டன. வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு சிரமமின்றி, சீரான ஸ்ரீவாரி தரிசனம் வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 489 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28 ஆயிரத்து 871 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 76 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article