திருநெல்வேலியில் ரூ.4 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பில் கலெக்டர் கைது

2 days ago 2

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம், 11வது வார்டுக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் பால்சிங். இவர் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தந்தையின் பெயரில் உள்ள சொத்து வரியை தன் பெயரில் மாற்றுவதற்காக தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் உள்ள பில் கலெக்டர் காளிவசந்த் (வயது 27) என்பவரை அணுகியுள்ளார்.

அதற்கு காளி வசந்த் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத பால்சிங், நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் லஞ்சப் பணத்தை பால்சிங்கிடம் இருந்து வாங்கியபோது காளிவசந்த்தை கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article