
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹாபி விமான நிலையத்தில் இருந்து மெக்சிகோவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 134 பயணிகள் இருந்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்தது. இதனால் அந்த விமானம் ஹூஸ்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அப்போது அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். முன்னதாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.