
திருநெல்வேலி மாவட்டம், பாறைகுளம் கிராமத்தில் 2011-ம் ஆண்டு, இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறினால் நடந்த முத்துக்குமாரின் கொலை சம்பவம் தொடர்பான வழக்கு திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (11.07.2125) வழக்கில் சம்பந்தப்பட்ட சரவணன் (வயது 51) மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி ராபின்சன் ஜார்ஜ், சரவணனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தாலுகா காவல் நிலைய காவல் அதிகாரிகள், காவலர்கள், குற்றவாளிக்கு நண்டனை பெற்று தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் சூரசங்கரவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டணையும், 52 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன. மேற்சொன்ன தண்டனை பெற்றவர்களில், 14 பேர் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.