
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கொலை முயற்சி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கடம்போடு வாழ்வை சேர்ந்த நம்பி (வயது 45) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நம்பியை, களக்காடு போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.