திருத்தணி அரசு கல்லூரியில் ஆய்வகத்தில் புகுந்த நல்லபாம்பு: மாணவர்கள் பீதி

2 months ago 18

திருத்தணி: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுப்பிரமணியசாமி அரசு கலைக்கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியில் வேதியல் ஆய்வகத்தில் மாணவர்கள் நேற்று ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென 6 அடி நீளம் கொண்ட நல்லபாம்பு ஆய்வகத்திற்குள் புகுந்துள்ளது. இதனைக்கண்ட மாணவர்கள் அங்கிருந்து பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக, திருத்தணி தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேதியல் ஆய்வகத்தில் ஒளிந்திருந்த 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். அப்போது அந்த பாம்பு 3 அடி நீளமுள்ள மற்றொரு பாம்பை விழுங்கி இருந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் நல்லபாம்பை பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர். கல்லூரி ஆய்வகத்தில் நல்லபாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருத்தணி அரசு கல்லூரியில் ஆய்வகத்தில் புகுந்த நல்லபாம்பு: மாணவர்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article