திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார்

6 hours ago 3

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 7ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் இன்று திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில் வைத்து கும்பாபிஷேக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உட்பட தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர் திருநெல்வேலி நகரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை நகரம் ஆகிய மாவட்டம்/நகரங்களைச் சேர்ந்த 9 எஸ்.பி.க்கள், 32 ஏ.டி.எஸ்.பி.க்கள், 73 ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள், 87 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட சுமார் 5,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள், ஏ.எஸ்.பி.க்கள்/ டி.எஸ்.பி.க்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Read Entire Article