
நெல்லை,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க கூட்டணிதான் வலுவாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி ஆட்சியா? தனி ஆட்சியா? என்பதே அங்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார், தி.மு.க. களத்தில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிரிவு' பாதுகாப்பு கொடுக்கலாம். ஆனால் அவர் வெற்றி பெற போவதில்லை. நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. ஒரு போதும் வெற்றி பெறாது. 'தி.மு.க., பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை' என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் கூறியதாக கேட்கிறீர்கள். தி.மு.க கூட்டணிக்கு, தமிழக வெற்றிக் கழகத்தை, நடிகர் விஜயை நாங்கள் அழைக்கவே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.