
தர்மசாலா,
திபெத் புத்த மதத்தலைவர் தலாய் லாமா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு அடுத்த தலாய் லாமாவை தனது அறக்கட்டளையே அடையாளம் காணும் என சமீபத்தில் அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறுகையில், 'பல தீர்க்கதரிசனங்களைப் பார்க்கும்போது, அவலோகிதேஸ்வரரின் ஆசீர்வாதம் எனக்கு இருப்பதாக உணர்கிறேன். இதுவரை நான் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்வேன் என நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன' என தெரிவித்தார்.
இதுவரை புத்த தர்மத்துக்கும், திபெத் நலன்களுக்கும் சேவை செய்ய முடிந்ததாக கூறிய தலாய் லாமா, 130 ஆண்டுகள் உயிர்வாழ்வேன் என இன்னும் நம்புவதாகவும் கூறினார்.