திருச்செந்தூரில் திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய கடல்

3 months ago 23

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

நாளை (புதன்கிழமை) இரவு பவுர்ணமி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் திடீரென கடல் நீர் உள்வாங்க தொடங்கியது. பின்னர் சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியது. இரவிலும் உள்வாங்கியே காணப்பட்டது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.

ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

 

Read Entire Article