எம்.பி.ஏ. படிப்பில் சேருவது எப்படி? மாணவ மாணவிகளுக்கான விரிவான விளக்கங்கள்

4 hours ago 2

எம்.பி.ஏ. படிப்பு என்பது மாஸ்டர் ஆப் பிசினஸ் அட்மினிஸ்டிரேசன் என்னும் படிப்பை குறிக்கும். மேலாண்மை (Management) நிர்வாகம் (Administration) போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த பயிற்சிகளை பெறுவதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் சிறந்த படிப்பு இது.

தொழில் நிறுவனங்களுக்கான சூழல்களை புரிந்து கொள்வதற்கு வசதியாக பாடத்திட்டத்தை உருவாக்கி, தேவையான அடிப்படை பயிற்சிகளை வழங்கி, சிறந்த தலைமைப்பண்பு கொண்ட மேலாண் வல்லுநர்களை உருவாக்குவதே இந்த படிப்பின் முக்கிய நோக்கமாகும்.

தொழிற்சாலை அல்லது வணிக நிறுவனத்தில் சேர்ந்தபின்பு மேலாண்மை அல்லது நிர்வாக பயிற்சிகளை பெறுவதற்கு பதில், பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கும்போதே தொழில், வணிக நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி முறையான பயிற்சியை எம்.பி.ஏ. படிப்பில் வழங்குகிறார்கள்.

எம்.பி.ஏ., படிப்பில் ஒரு மாணவன் "மேனேஜ்மெண்ட் பிரின்சிபிள்" என்னும் பாடத்தின் மூலம் நிர்வாகம் செய்வதைப்பற்றி தெளிவாக புரிந்துகொள்கிறார். 'ஆர்கனைசேக்ஷன் பிகேவியர்' என்னும் பாடத்தின்மூலம் தொழில் வணிக நிறுவனங்களில் மனிதர்களின் குணங்கள் மற்றும் நடைமுறைகள்பற்றி தெரிந்து கொள்கிறார். இவை தவிர, 'ரோல் பிளே'(Role Play), 'வணிக விளையாட்டுகள்' (Organisational Games) போன்ற மேலாண்மை யுக்திகள் மூலம் நிர்வாக திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தொழிலதிபர்களையும், தொழிற்சாலையில் பணிபுரியும் உயர் அதிகாரிகளையும் அழைத்து விருந்தினர் பேரூரை என்னும் பெயரில் அவர்களது அனுபவங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்குகின்ற வாய்ப்புகளும் இந்த படிப்பின்மூலம் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதன்மூலம் தொழில், வணிக நிறுவனங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர் பிரச்சினைகள் நிர்வாக சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ளும் சூழல் மாணவ – மாணவிகளுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது.

'தொழிற்சாலை பார்வையிடல்' (Industrial Visit) என்பது எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் பல்வேறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடும் பயிற்சியை குறிக்கும். இதன்மூலம், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் உற்பத்தி மேலாண்மை (Production Management), சந்தைப்படுத்துதல் மேலாண்மை (Marketing Management), நிதி மேலாண்மை (Financial Management) மற்றும் மனிதவள மேலாண்மை (Human Resource Management) ஆகிய துறைகளில் தேவையான தவல்களை பெற இயலும்.

இவை தவிர, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சென்று தொடர்ந்து 3 அல்லது 5 மாதங்கள் 'உள்ளுறை பயிற்சி'யும் (Internship Training) வழங்கப்படுகிறது.

குறிப்பிட்ட தலைப்பில் தகவல்களை பகுப்பாய்வு செய்து, நடைமுறை செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பதற்கான பயிற்சியான 'புராஜக்ட் வொர்க்' (Project Work) எனப்படும் செயல்முறை பயிற்சியும் எம்.பி.ஏ. படிப்பில் வழங்கப்படுகிறது. இதனால், எம்.பி.ஏ. படிப்பில் பலரும் விரும்பி சேர்கிறார்கள். இந்தப்படிப்பில் சிறப்பிடம் பெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்புகள் வழங்க பல்வேறு நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

எம்.பி.ஏ. படிப்பில் சேர…

பொதுவாக எம்.பி.ஏ. படிப்பில் மாணவ மாணவிகளை சேர்த்துக்கொள்ள -

1.நுழைவுத்தேர்வு (Entrance Examination)

2.குழு விவாதம் (Group Discussion)

3.நேர்முகத்தேர்வு (Interview)

ஆகிய மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்து படிக்க கல்வி நிறுவனங்கள் அனுமதி வழங்குகின்றன.

இப்போது பல கல்வி நிறுவனங்கள் நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே மாணவ – மாணவிகளை தங்கள் கல்வி நிறுவனங்களிலுள்ள எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக்கொள்கிறார்கள். பொதுவாக – நுழைவுத்தேர்வு என்பது ஒருவரின் அறிவு (Knowledge) மற்றும் சிறப்புத்திறமைகள் (Special Skills) ஆகியவற்றை மதிப்பீடு செய்ய உதவுகிறது. ஆனால் குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு போன்றவைகள் ஒருவரின் மனப்பாங்கை (Attitude) மதிப்பீடு செய்ய உதவும்.

ஒரு மாணவரது அறிவு, திறமை மனப்பாங்கு ஆகியவற்றை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் மாணவ – மாணவிகளை தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளும்போது வழங்கும் பயிற்சிகள் முன்னேற்றத்திற்கு உதவும். ஆனால், மனப்பாங்கு சரியில்லாத மாணவருக்கு வழங்கப்படும் பயிற்சிகள் வீணாகும் என்பதைத் தெரிந்த கல்வி நிறுவனங்கள் குழு விவாதம் மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றை நடத்தி, அதன் அடிப்படையிலேயே மாணவர்களை எம்.பி.ஏ. படிப்பில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

விதவிதமாய் எம்.பி.ஏ. படிப்புகள்

எம்.பி.ஏ. படிப்பு பல்வேறு நிலைகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பயிற்றுவிக்கும் முறை கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் எம்.பி.ஏ. பயிற்றுவிக்கும் முறை பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமையும். ஆனால், ஏற்கனவே நிர்வாகிகளாக பணிபுரிபவர்களுக்காக நடத்தப்படும் எம்.பி.ஏ. படிப்பில் அவர்களது திறமையை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்றுவிக்கும் முறைகளை கொண்டு எம்.பி.ஏ. படிப்பை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. இணையவழி எம்.பி.ஏ. (Online MBA Programme)

2. முழுநேர இரண்டு வருட எம்.பி.ஏ. (Full time two-year MBA Programme)

3. முழுநேர ஒரு வருட எம்.பி.ஏ (Full time one-year MBA Programme)

4. பகுதிநேர எம்.பி.ஏ. (Part time MBA Programme)

5. நிர்வாகிகளுக்கான எம்.பி.ஏ. (Executive MBA Programme)

6. தொலைதூர கல்வி மூலம் எம்.பி.ஏ. (Distance Learning MBA Programme)

பயிற்றுவிக்கும் முறையில் வகைப்படுத்துதல் போலவே பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையிலும் எம்.பி.ஏ. படிப்பை பலவித பெயர்களில் அழைக்கிறார்கள்.

சில எம்.பி.ஏ. படிப்புகளின் விவரங்கள்:

· MBA (ACCOUNTING)

· MBA (AI AND ML)

· MBA (BUSINESS ANALYTICS)

· MBA (BUSINESS ECONOMICS AND PUBLIC POLICY)

· MBA (BUSINESS)

· MBA (BUSINESS, ENERGY, ENVIRONMENT AND SUSTAINABILITY)

· MBA (COMPUTER SYSTEMS)

· MBA (CONSULTING)

· MBA (CRIMINAL JUSTICE)

· MBA (DATA ANALYTICS)

· MBA (DATA SCIENCE)

· MBA (DIVERSITY, EQUITY, AND INCLUSION)

· MBA (ENGINEERING MANAGEMENT)

· MBA (ENTREPRENEURSHIP AND INNOVATION)

· MBA (ENTREPRENEURSHIP)

· MBA (ENVIRONMENTAL, SOCIAL AND GOVERNANCE FACTORS FOR BUSINESS)

· MBA (FINANCE)

· MBA (GENERAL MANAGEMENT)

· MBA (GLOBAL MANAGEMENT)

· MBA (HEALTH CARE MANAGEMENT)

· MBA (HUMAN RESOURCE MANAGEMENT)

· MBA (HUMAN RESOURCE)

· MBA (INTERNATIONAL BUSINESS)

· MBA (LEADERSHIP)

· MBA (LOGISTICS AND SUPPLY CHAIN MANAGEMENT)

· MBA (MANAGEMENT INFORMATION SYSTEMS)

· MBA (MANAGEMENT)

· MBA (MARKETING)

· MBA (MULTINATIONAL MANAGEMENT)

· MBA (OPERATIONS MANAGEMENT)

· MBA (OPERATIONS)

· MBA (OPERATIONS, INFORMATION AND DECISIONS)

· MBA (ORGANIZATIONAL EFFECTIVENESS)

· MBA (PROJECT MANAGEMENT)

· MBA (QUANTITATIVE FINANCE)

· MBA (REAL ESTATE)

· MBA (SOCIAL AND GOVERNANCE FACTORS FOR BUSINESS)

· MBA (STRATEGIC MANAGEMENT)

· MBA (TECHNOLOGY MANAGEMENT)

இவை தவிர, மேலாண்மை படிப்பில் கீழ்க்கண்ட துறைகளில் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் போன்றவைகள் நடத்தப்படுகின்றன. அவை,

* CONSTRUCTION MANAGEMENT

* COMMUNICATION MANAGEMENT

* COOPERATIVE MANAGEMENT

* ENVIRONMENT MANAGEMENT

* FASHION MANAGEMENT

* FINANCE MANAGEMENT

* FOREST MANAGEMENT

* HEALTH / HOSPITAL MANAGEMENT

* HOTEL MANAGEMENT

* RURAL MANAGEMENT

* TELECOM MANAGEMENT

* POWER MANAGEMENT

* CAPITAL MARKET MANAGEMENT

* NATURAL RESOURCE MANAGEMENT

* SPORTS MANAGEMENT

* INFORMATION TECHNOLOGY AND MANAGEMENT

* TRAVEL / TOURISM MANAGEMENT

* PHARMACEUTICAL MANAGEMENT

* PUBLIC SERVICE MANAGEMENT

* NON FORMAL SECTOR MANAGEMENT

* OIL AND GAS SECTOR MANAGEMENT

* TOURISM AND HOSPITALITY MANAGEMENT

எம்.பி.ஏ. படிப்பில் சேர எழுத வேண்டிய சில முக்கிய நுழைவுத்தேர்வுகள்

• COMMON ADMISSION TEST (CAT)

• XAVIERS ADMISSION TEST (XAT)

• AIMS TEST FOR MANAGEMENT ADMISSION (ATMA)

• MANAGEMENT APTITUDE TEST (MAT)

• JOINT MANAGEMENT ENTRANCE TEST (JMET)

• GRADUATE MANAGEMENT ADMISSION TEST (GMAT)

• ELECTRONIC MANAGEMENT APTITUDE TEST (E-MAT)

• INDIAN INSTITUTE OF FOREIGN TRADE (IIFT) ENTRANCE EXAMINATIONS

• TAMIL NADU COMMON ENTRANCE TEST (TANCET)

சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி?

எம்.பி.ஏ. படிப்பை முடித்தவுடன் உடனடியாக வேலை கிடைக்கும் என ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்தப்படிப்பில் விரும்பி சேருகிறார்கள்.

எம்.பி.ஏ. என்ற மூன்றெழுத்து பலரது வாழ்க்கையில் ஒளி ஏற்றினாலும், சிலர் அந்த படிப்பை முடித்த பின்பு, படிக்கும்போதே போதிய பயிற்சிகளை பெற தவறியதால் சிறந்த வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடுகிறார்கள். எனவே, சிறந்த பயிற்சிகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவற்றுள் மிகச்சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து எம்.பி.ஏ. படிப்பதே விவேகமான செயலாகும்.

சிறந்த கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்தபின்பு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுப்பது நல்லது.

1. கல்வி நிறுவனம் முறையான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதா?

2. கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே வேலை வழங்கும் நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி வேலை வழங்குகிறார்களா?

3. கல்வி நிறுவனத்தில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் தேவையான தகுதியும், அனுபவமும் பெற்றவர்களாக இருக்கிறார்களா?

4. கல்வி நிறுவனத்தை எம்.பி.ஏ. படிப்பை படிப்பதற்கும், பயிற்சிகள் பெறுவதற்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் (INFRASTRUCTURE FACILITIES) உள்ளதா?

5. சிறப்பான பயிற்சிகள் வழங்க கல்வி நிறுவனத்தில் எல்லாவிதமான வசதிகளும் கல்வி நிறுவனத்தில் உள்ளதா?

மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு தெளிவான விடை தெரிந்தபின்பே எம்.பி.ஏ. படிப்பை நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேருவது நல்லது.

மேலாண்மை துறையில் எந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தாலும், அந்த படிப்பில் விருப்பமுடனும், மனமகிழ்வுடனும் படிப்பவர்களும், பயிற்சி பெறுபவர்களும் நிச்சயமாக சிறந்த வெற்றியை எளிதில் பெற இயலும். 

Read Entire Article