
லண்டன்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் 3வது போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும், 3வது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கஸ் அட்கின்சன் இடம் பிடித்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த அவர் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்து அணி விவரம் (3வது டெஸ்ட்):-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜேக் க்ராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஆலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்க், கிறிஸ் வோக்ஸ்.