*போலீசார் விசாரணை
திருச்செங்கோடு : நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பெரியமணலி ஜேடர்பாளையம் பகுதியில் பாதி எரிந்த நிலையில், ஒரு ஆண் சடலம் கிடப்பதாக, எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில் இறந்து கிடந்தவர் கிருஷ்ணராஜ்(65) என்பதும், தறித்தொழிலாளியான இவருக்கு பங்கஜம் (61) என்ற மனைவியும், கார்த்தி(41), பிரகாஷ்(38) என்ற மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
மனைவியுடன் தனியாக வசித்து வந்த கிருஷ்ணராஜ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, மனம் உடைந்த நிலையில், அடிக்கடி இதுபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவார் என்பதும், 10 முறைக்கு மேல் இதுபோல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த முறை உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்ட அவர், தனது வீட்டுக்கு பின்பக்கம் உள்ள பகுதியில் எரிந்த நிலையில் சடலமானார்.
இந்த சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை, திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேரில் பார்வையிட்டனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post திருச்செங்கோடு அருகே பாதி எரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.