அவிநாசி, ஏப்.17: அவிநாசி பேரூராட்சியில் நடப்பு ஆண்டுக்கான சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையை பெறலாம் என அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூறியதாவது: அவிநாசி பேரூராட்சியில் நடப்பு ஆண்டுக்கான முதலாம் அரையாண்டு சொத்து வரியை, ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், 2ம் அரையாண்டுக்கான சொத்து வரியை, அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவிதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் சொத்து வரி, குடிநீர்வரி உள்ளிட்ட இதர வரி இன கட்டணங்களை நேரடியாக பேருராட்சி அலுவலக வேலை நாட்களில் மைய கணினி வரி வசூல் மையத்தில், பணமாகவோ, ஜிபே செயலி மூலமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செலுத்தலாம். எனவே, சொத்து உரிமையாளர்கள் சொத்து வரிக்காக அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வரி வசூல் மையத்திலோ 2025-26ம் ஆண்டுக்கான சொத்து வரியை உடனடியாக செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அவிநாசியில் சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் appeared first on Dinakaran.