சாலையில் கொட்டி கிடந்த காங்கிரீட் கலவையை அகற்றிய போலீசாருக்கு பாராட்டு

2 days ago 3

திருப்பூர், ஏப்.17: திருப்பூர், குமார் நகரில் சாலையில் கொட்டிக் கிடந்த கான்கிரீட் கலவையை அகற்றி சுத்தம் செய்து குழிகளை மூடிய போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர். திருப்பூர்-அவிநாசி சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரெடிமிக்ஸ் காங்கிரீட் வாகனத்திலிருந்து காங்கிரீட் கலவைகள் கீழே கொட்டி அங்காங்கே சிதறி கடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதனை பார்த்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் காங்கிரீட் கலவைகளை அள்ளி சாலையை சீரமைக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து எஸ்ஐக்கள் செல்லப்பாண்டி, குருசாமி, போலீசார் முனியப்பன், மாரியப்பன் ஆகியோர் சேர்ந்து குமார் நகர் மற்றும் பல்வேறு பகுதியில் கொட்டிக்கிடந்த காங்கிரீட் கலவைகளை அள்ளி குழியான இருந்த ரோட்டில் கொட்டி அதனை சீரமைத்தனர்.  போக்குவரத்து போலீசாரின் இந்த செயலை வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்.

சுற்றுலா தளம்
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பிறகு இதனை சுற்றுலாத்தலமாகவும் மேம்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டது. குளப்பகுதியை சுற்றி வேலி அமைத்தல், வரவேற்பு நுழைவு வாயில், நடைபாதை, தகவல் விளக்க கூடம், புத்துணர்வு மையம்,சிறிய திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பறவைகள் மர வீடு ஆகியவை அமைத்திட வனத்துறை சார்பில் திட்ட கருத்துரு உருவாக்கப்பட்டது ஆனால் இன்னும் அதற்கான எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மாநகருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றுலாத்தலமாக்கும் பட்சத்தில் திருப்பூர் மக்களுக்கு மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும், பறவை இனங்கள் குறித்து மாணவ மாணவியர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிவிழக்கும் நஞ்சராயன் சரணாலயம்: மீன் பிடிக்க தடை
பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இங்கு மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. வலசை வரும் பறவைகளின் இரையாக மீன்கள் இருப்பதன் காரணமாக இங்கு மீன் பிடிக்கும் பட்சத்தில் மீன்களின் எண்ணிக்கை குறையும் என தடை அமல்படுத்தப்பட்டது. மேலும், பறவைகளுக்கு தீங்கு விளைவித்தல், மரம் வெட்டுதல், தீ வைத்தல், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை போடுதல், அத்துமீறி நுழைதல், மது அருந்துதல் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது சிலர் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் மது அருந்தும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

The post சாலையில் கொட்டி கிடந்த காங்கிரீட் கலவையை அகற்றிய போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article