சென்னை:திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக இயக்கபடும். கோடைகாலத்தில் கூடுதல் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க பின்வரும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும்.
ரயில் எண் 06190 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வாரத்தில் 5 நாட்கள் 29 ஏப்ரல் முதல் 29 ஜூன் 2025 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 05:35 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, அதே நாளில் 12:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்
திரும்பும் திசையில், ரயில் எண் 06191 தாம்பரம் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வாரத்தில் 5 நாட்கள் 29 ஏப்ரல் முதல் 29 ஜூன் 2025 வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 15:45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாளில் 22:40 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும்.
பெட்டிகளின் அமைப்பு : 2- ஏசி நாற்காலி பெட்டிகள், 10- இரண்டாம் வகுப்பு நாற்காலி பெட்டிகள், 6- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் & 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளது.
The post திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.