திருச்சியில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 months ago 13

திருச்சி,

நாடு முழுவதும் விமானங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சோதனையிடும் போது அது புரளி என தெரியவருகிறது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி வித்யாலயா, சந்தானம் வித்யாலயா, ராஜம் கிருஷ்ணமூர்த்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் பெண்கள் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். 

Read Entire Article