திருச்சி, ஏப்.22: திருச்சியில் முதியவர்களிடம் வழிபறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, வயலூர் சாலை, சண்முகா நகரை சேர்ந்தவர் ஸ்டாலின்(59), ஹீபர் சாலை அருகே உள்ள பெட்டி கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஏப்.20ம் தேதி கடையில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் பணம் கேட்டுள்ளார். தர மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூ.700ஐ பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம், லால்குடி, வைப்பூரை சேர்ந்தவர் முருகேசன் (52), கிராப்பட்டி, ரயில்வே குடியிருப்பு அருகே பழக்கடை நடத்தி வருகிறார். ஏப்.20ம் தேதி தன் கடையில் வேலை பார்த்த போது, அங்கு வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து 2 முதியவர்களிடமும் பணம் பறித்த பெரிய மிளகுபாறை, நாயக்கர் தெருவை சேர்ந்த வல்லரசு (38) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். உப்பிலியபுரத்தில் ரூ.2.89 கோடியில் அமைக்கப்பட்டது.
The post திருச்சியில் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.