திருச்சி, மே 17: திருச்சியில் 9 பவுன் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி, கருமண்டபம், கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சந்திரபாபு, பர்னீச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்மொழி (59). இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இதே பகுதியில் செல்வநகரில் ஒத்திகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். அப்போது இவர்களது வீட்டில் உறையூர், கல்நாயக்கன் தெருவை சேர்ந்த சத்தியா (35) என்ற பெண் வீட்டுவேலை செய்து வந்தார். அப்போது 1 பவுன் மதிப்புள்ள 5 தங்க காசுகள், அரை பவுன் மதிப்புள்ள 2 தங்க காசுகள், 1 பவுன் மதிப்புள்ள 1 தோடு மற்றும் 2 பவுன் மதிப்புள்ள 1 கைச்செயின் என மொத்தம் 9 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் பீரோவில் இருந்து திருடுபோனது பொன்மொழிக்கு தெரிந்தது.
இதற்கு பின் சத்யா வீட்டுவேலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர், இதில் சத்யா தங்க நகைகளை திருடியது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 2.5 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருச்சியில் நகை திருடிய பெண் கைது appeared first on Dinakaran.