
திருச்சி - பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருகிற 9-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படுகிறது. இனி 9-ந்தேதியில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தோ அல்லது மத்திய பேருந்து நிலையத்திலிருந்தோ பஸ்கள் புறப்படாது.
அனைத்து பேருந்துகளும் திருச்சி புதிய (பஞ்சப்பூர்) ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து தான் கிளம்பும். இதில், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், கடலூர், துறையூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் அடங்கும். பெரம்பலூர் மக்கள் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும் என்றால், ஒன்று நம்பர் ஒன் டோல்கேட்டில் இறங்கி பஸ் மாற வேண்டும்.
அல்லது அவர்கள் பால் பண்ணையில் இறங்கி பஸ் மாற வேண்டி இருக்கும். (ரூட்: நம்பர் ஒன் டோல்கேட், பால் பண்ணை, டி.வி.எஸ். டோல்கேட், மன்னார்புரம் பஞ்சப்பூர் பேருந்து நிலையம்) நகர பேருந்துகள் வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தே கிளம்பும். மற்ற அனைத்து பெரிய நகரங்களுக்கும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்துதான் கிளம்பும்