திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 60 பேர் காயம்

4 hours ago 2

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. போட்டியில் 1,150 காளைகளும், 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியில் பங்கேற்கும் காளைகள் அனைத்துக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மைதானத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். மொத்தம் 440 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

போட்டியில் காளைகள் முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் உள்பட 60 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.   

Read Entire Article