
திருச்சி,
இந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் பயணிகளின் உடைமைகள், ஆவணங்கள் சோதனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவியின் மூலம் சோதனை செய்யப்படுகிறது. மேலும் விமான நிலையத்தின் ஏப்ரான் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் விமானத்்தில் இருந்து இறங்கி வரும் பயணிகளும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை வருகிற18-ந்தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது.