திருச்சி என்ஐடி-யில் தொடங்கி சிங்கப்பூர், கலிபோர்னியா வரை சூறாவளியாக மாறிய சென்னை தொழிலதிபரின் காதல் திருமண வாழ்க்கை

1 week ago 7

* 9 வயது மகனை பந்தாடும் தம்பதிகள்
* பகீர் கிளப்பும் பாலியல் குற்றச்சாட்டுகள்
* தமிழ்நாடு போலீசின் பிடியில் இருந்து தப்பித்து தலைமறைவான பரபரப்பு தகவல்

டெல்லி: திருச்சி என்ஐடி-யில் தொடங்கி சிங்கப்பூர், கலிபோர்னியா கோர்ட் வரை ெசன்ற சென்னை தொழிலதிபரின் காதல் திருமண வாழ்க்கை சூறாவளியாக மாறியது. தமிழ்நாடு போலீசின் பிடியில் இருந்து தலைமறைவாக இருக்கும் பிரசன்னா, சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவரது மனைவி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பிரசன்னா சங்கர் என்பவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், ‘எனது பெயர் பிரசன்னா சங்கர், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ‘ரிப்ளிங்க்’ நிறுவனத்தின் நிறுவனராக உள்ளேன். என் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறப் போகிறேன். சென்னை போலீசாரிடமிருந்து, தமிழ்நாட்டிற்கு வெளியே மறைந்திருக்கிறேன். இப்போது தப்பி ஓடிக்கொண்டிருக்கிறேன். சென்னையில் பிறந்து 20 வருடங்கள் வசித்து வந்தேன்.

திருச்சி என்ஐடி-யில் படித்தேன்; அங்குதான் என் மனைவி திவ்யா சசிதரரைச் சந்தித்தேன். இந்தியாவில் நம்பர் ஒன் கேடராக தரவரிசைப்படுத்தப்பட்டேன். தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்க அமெரிக்கா சென்றேன். எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது; எங்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் என் மனைவிக்கு அனூப் என்ற நபருடன் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கள்ளத் தொடர்பு இருப்பது தெரிந்ததும் எங்கள் திருமணம் முறிந்தது. அனூப்பின் மனைவி என் மனைவிக்கும், என் மனைவி அனூப்பிற்கு அனுப்பிய செய்தியையும், அவருக்காக ஓட்டல் முன்பதிவு செய்ததற்கான தகவல்களையும் எனக்கு அனூப் அனுப்பினார். அதன் பிறகு, எங்கள் விவாகரத்தின் ஒரு பகுதியாக, நான் திவ்யாவிற்கு எத்தனை மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தோம்.

ஆனால் அவர் மகிழ்ச்சியடையவில்லை; அதற்கு பதிலாக நான் அவரை அடித்ததாக, என் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். பின்னர், நான் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலி புகார்களை அளித்தார். சிங்கப்பூர் போலீசார், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவை ஆதாரமற்றவை என்று கண்டறிந்து, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் என்னை விடுவித்துள்ளனர். நான் இந்தியாவில் விவாகரத்து கேட்டு மனு செய்தேன். விவாகரத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு செய்தார். பின்னர் அவர் விவாகரத்து வழக்கில் உதவுவதற்காக என் குழந்தையை அமெரிக்காவிற்கு கடத்த திட்டமிட்டார். அதையடுத்து நான் அமெரிக்காவில் இருக்கும் சர்வதேச குழந்தை கடத்தல் வழக்கைத் தாக்கல் செய்தேன். நீதிபதி எனக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து குழந்தையைத் திருப்பித் தரச் சொன்னார்.

பல பின்னடைவுகளை சந்தித்த என் மனைவி, சிங்கப்பூரில் சட்டங்களை மீறியதால், எங்கள் சொந்த ஊரான சென்னைக்கு வந்து இங்கேயே குடியேற அவள் என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கான இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்; அவருக்கு நான் மாதம் 9 கோடி 4.3 லட்சம் செலுத்துவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திவ்யாவையும், என் மகனையும் சென்னைக்குத் திருப்பி அனுப்ப விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, எங்கள் மகனை சரிபாதி காலம் பராமரிக்க ஒப்புக்கொண்டோம். அது சிறிது காலம் நடந்தது. எங்களது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மகனின் பாஸ்போர்ட்டை ஒரு பொதுவான லாக்கரில் வைக்க வேண்டியிருந்தது; ஏனென்றால் அவர் தப்பித்து சென்றுவிடுவார் என்று பயந்தேன். ஆனால் அந்த நடைமுறையை பின்பற்ற அவர் மறுத்துவிட்டார்.

அதன்பிறகு எங்களுக்குள் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்றும், இன்னும் அதிகம் பணம் தர வேண்டும் என்றும், விவாகரத்து கோரி மீண்டும் அமெரிக்கா செல்வதாகவும் கூறினார். அதிர்ச்சியடைந்த நான் நீதிமன்றத்தில் முறையிட்டேன். பாஸ்போர்ட்டை லாக்கரில் வைத்த பிறகுதான் மகனைத் திருப்பித் தருவேன் என்று கூறினேன். ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக இரவு 10 மணிக்கு நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து, என் மகனை 10 நிமிடங்கள் லாபிக்கு அழைத்து மூளை சலவை செய்ய முயன்றார். அதனை நான் தடுத்தேன். பின்னர் அவர் போலீசை அழைத்து, எனக்கு எதிராக குழந்தை கடத்தல் புகார் அளித்தார். நள்ளிரவில் போலீசார் கதவைத் தட்டினர். ஆனால் நான் அதற்கு முன்பாகவே அங்கிருந்து தப்பினேன். என் தரப்பு நியாயத்தை என் வழக்கறிஞர்களுடன் பேசி, அவர் மூலம் போலீசாருக்கு தெரிவித்தேன்.

இந்த விசயத்தில் போலீசார் தலையிடக்கூடாது என தெரிவித்தேன். ஆனால் தொடர்ந்து போலீசார் என்னைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கின்றனர். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மகனை அழைத்துச் செல்ல உதவிய என் நண்பர் கோகுலை, அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்படுவான் என்று கூறினர். பயந்துபோன என் நண்பர் கோகுல், இது கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்னை என்றும், அவரைத் தனியாக விட்டுவிட வேண்டும் என்றும் போலீசாரிடம் கூறிவிட்டு பெங்களூரு சென்றுவிட்டார். ஆனால் வாரண்ட், ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பெங்களூரு போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், மப்டி உடையில் பெங்களூரு சென்று அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 3 நாட்களாக அவர் மீது எந்த எப்ஐஆரும் போடாமல் காவலில் வைத்திருந்தனர்.

நான் சரணடையவில்லை என்றால் அவர் துன்புறுத்தப்படுவார் என்று எச்சரித்துள்ளனர். அவர்கள் அவரை ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தவில்லை. அதற்கு பதிலாக தினமும் காலையில் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்து இரவு வரை உட்கார வைத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள். போலீஸ் தரப்பில் நெருக்கடி தொடர்வதால், எனது முழு குடும்பமும், தமிழக போலீசாரிடமிருந்து ஒளிந்து கொண்டு மாநிலத்திற்கு வெளியே உள்ளது. போலீசார் என்னுடைய செல்போன் இருப்பிடம், கார், ஐபிஐ, ஐபி போன்றவற்றை கண்காணித்து வருகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதற்கான வீடியோக்கள், தனது மனைவிக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல் போன்ற ஆதாரங்களையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். பிரசன்னா தரப்பில் இத்தனை விபரங்கள் வெளியான நிலையில், திவ்யா தரப்பில் எவ்வித தகவல்களும் வெளியாகாததால் ஊடகங்களில் முன்னுக்கு பின்னாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் திவ்யா, சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனத்திற்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், ‘நான் குழந்தையைக் கடத்தியதாக பிரசன்னா கூறியதை மறுக்கிறேன். குடும்ப வன்முறையில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அமெரிக்காவிற்குத் தப்பி வந்துள்ளேன். அவசர பாஸ்போர்ட் மற்றும் பிரசன்னாவுக்கு எதிராக தடுப்பு ஆணை பெற்றுள்ளேன். எனக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக பிரசன்னா கூறும் வாட்ஸ்அப் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் கணவர் பிரசன்னா, ஒரு பாலியல் வேட்டைக்காரர் மறைந்திருந்து பார்க்கும் பழக்கம் உடையவர். திருமணமாகி அவருடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், அவர் என்னை வேறு நபர்களுன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தினார். எனது மகன் பிறந்த பின்னர், பிரசவத்திற்குப் பிந்தைய வலியுடன் நான் இருந்தபோதும், என்னை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தினார். ‘செக்ஸ் என்பது எனக்கு அடிப்படைத் தேவையானது.

அதை நான் செய்ய வேண்டும். நீ எவ்வளவு வலியில் இருக்கிறாய் என்பது எனக்கு முக்கியமல்ல’ என்று அவர் நீதிமன்றத்தில் கூறினார். மேலும் நீ அவ்வாறு ஒத்துழைக்கவில்லை என்றால், நான் வெளியே சென்று (வேறு பெண்ணுடன்) அதைத் தேடிக்கொள்வேன் என்று மிரட்டினார். சிங்கப்பூரில் வசித்த போது, என் மகனின் குளியலறை உட்பட பல இடங்களில் மறைமுக கேமராக்களைப் பொருத்தி ரகசியமாக கண்காணித்தார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக இருப்பதாலும், சொத்துகளை பிரித்து கொடுப்பதில் இருந்து தப்பிப்பதற்காக வெவ்வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார். குறிப்பாக அமெரிக்க வருமான வரி மற்றும் வெளியேறும் வரியைத் தவிர்க்கவே அவ்வாறு செய்தார். பல நேரங்களில் அவர் தன்னை உடல் ரீதியாகத் தாக்கினார். தன்னுடைய செல்வாக்கு மற்றும் அதிகாரத்தைக் காட்டி மீண்டும் மீண்டும் மிரட்டினார். எனது வங்கிக் கணக்குகளில் பணப்பரிமாற்றத்தை கட்டுப்படுத்தினார்’ என்று பரபரப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திவ்யாவின் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்குத் தனது தரப்பு பதில்களை இந்தியாவில் இருக்கும் செய்தி நிறுவனத்திற்கு பிரசன்னா சங்கர் அளித்தார். ‘திவ்யாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, செய்தி நிறுவனங்களின் நோக்கத்தை நிறைவேற்ற விரும்பவில்லை. மாறாக திவ்யாவின் குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் உண்மையில்லை. தற்போது எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அவர் தெரிவித்துள்ளதால், விரைவில் எனது தரப்பு முழுமையான அறிக்கையை வெளியிடுவேன். எனக்கு எதிராக கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், அவருடன் 7 வருடங்கள் பழகியபோதும், 10 வருடங்கள் திருமண பந்தத்தில் இருந்தபோதும் ஏன் கூறவில்லை. அவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சொன்ன பொய்களை மீண்டும் தொகுத்து பேட்டியாக கொடுத்துள்ளார். திடீரென்று எப்படி இவ்வளவு மோசமான நபராக மாறினேன்? அவர் கூறும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்குரியதாக இல்லையா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா சசிதரர் இடையேயான குழந்தை கடத்தல் மற்றும் விவாகரத்து வழக்கு, இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை (குடும்ப வன்முறை, பாலியல் வற்புறுத்தல், துரோகம், கடத்தல், நிதி கட்டுப்பாடு, ரகசியமாக கண்காணித்தல்) முன்வைப்பதன் மூலம் பிரச்னைகள் மேலும் சிக்கலடைந்துள்ளது. திவ்யாவின் தரப்பு வாதங்கள், தற்போது அமெரிக்க செய்தி நிறுவனம் மூலம் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்து பிரசன்னா தரப்பிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா சசிதரர் இடையேயான பெரும்பாலான கருத்து மோதல்கள் சிங்கப்பூரில் நடந்துள்ளது. அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் அமெரிக்காவில் நடந்துள்ளது. சிறிது காலம் திவ்யாவும், அவரது மகனும் சென்னையில் இருந்துள்ளனர்.

தற்போது தனது மகனுடன் திவ்யா அமெரிக்காவில் உள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் பிரசன்னாவை சென்னை போலீஸ் தேடி வருகிறது. எனவே பிரசன்னா சங்கர் மற்றும் திவ்யா சசிதரர் இடையேயான பிரச்னை இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று மூன்று நாடுகளையும் சுற்றிச் சுற்றி வருகிறது. இதற்கிடையே பிரசன்னாவுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும், திவ்யாவுக்கு ஆதரவாக மற்றொரு குரூப்பும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு சண்டையிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐகோர்ட்டில் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனைவி முறையீடு: போலீசுக்கு நீதிபதி உத்தரவு
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசன்னா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘எனது மனைவி கொடுத்த போலி கடத்தல் புகாரின் பேரில், தமிழ்நாடு காவல்துறை என்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. எனது மகனைத் என்னிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கிறது. எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கோரினார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 27 அன்று பிறப்பித்த உத்தரவில், ‘விசாரணையின் போது யாரையும் துன்புறுத்தக் கூடாது’ என காவல்துறைக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி, பிரசன்னாவின் மனுவை முடித்து வைத்தது. இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் திவ்யா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பிரசன்னா என்னுடைய தனியுரிமையை மீறினார். எனது மைனர் மகனைச் சட்டவிரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எனது தனிப்பட்ட தொடர்பான விவரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். எனக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். என்னை பாலியல் தொழிலாளி என்றும் பேசியுள்ளார். எனக்கு எதிராக அவர் சமூக ஊடகங்களில் வெளியிடும் பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்’ என்று கோரினார். இம்மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டல் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘பிரசன்னா சங்கர் – அவரது மனைவி திவ்யா சசிதரர் இடையேயான குடும்ப பிரச்னை விவகாரத்தை சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும். மனுவில் பிரசன்னாவிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பார்த்தோம். இருவருக்கும் இடையிலான பிரச்னை சமரசம் செய்யப்பட வேண்டிய விஷயமாகும்’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

திவ்யா பயன்படுத்திய ‘ஓபன் மேரேஜ்’,‘செக்ஸ் வித் எஸ்கார்டு’ வார்த்தைகள்
சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனத்திற்கு திவ்யா அளித்த பேட்டியில், ‘Open Marriage, Sex With Escorts’ ஆகிய இரு வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதாவது ‘ஓபன் மேரேஜ்’ என்பது இது ஒருவிதமான திருமண உறவு முறையாகும். அதாவது திருமணமான தம்பதியினர் இருவரும், தங்களது தாம்பத்திய உறவுக்கு அப்பாற்பட்டு மற்ற நபர்களுடன் பாலியல் உறவு அல்லது கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இதற்காக திருமணமான தம்பதியருக்குள் பரஸ்பரம் ஒப்புதல் செய்து கொள்கிறார்கள். அதாவது, தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட புரிதலின் அடிப்படையில், மற்றவர்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள தங்களுக்குள் சுதந்திரம் அளித்துக்கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் ‘செக்ஸ் வித் எஸ்கார்டு’ என்பது பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் முறையாகும்.

அதாவது ஒருவருடன் பணத்தை வாங்கிக் கொண்டு அவருடன் நேரத்தைச் செலவிடும் முறை என்றும் கூறுகின்றனர். அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களுடன் பாலியல் உறவு கொள்வதைக் குறிக்கிறது. எனவே ‘ஓபன் மேரேஜ்’, ‘செக்ஸ் வித் எஸ்கார்டு’ என்ற வார்த்தைகளை பயன்படுத்தி பிரசன்னா மீது திவ்யா கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் வித்தியாசமானதாக உள்ளது. மேலும் அவர், ‘பிரசன்னாவின் குடும்ப வன்முறை காரணமாகவே, எனது பாதுகாப்பு கருதி மகனுடன் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றேன். எனது பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல், என்னை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தினார். சிங்கப்பூரில் உள்ள வீட்டில், என் மகன் பயன்படுத்தும் குளியலறை உட்படப் பல இடங்களில் மறைமுக கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி எங்களை ரகசியமாக உளவு பார்த்தார்.

என்னை பல நேரங்களில் மார்பில் குத்தினார். எனது நிதி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினார். தனது அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டினார். நான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தேவையான நீதிமன்ற ஆவணங்கள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் உள்ளன. அதனையும் ‘எஸ்எப் ஸ்டாண்டர்டு’ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளேன் என்று கூறியுள்ளார். ‘செக்ஸ் என்பது எனக்கு அடிப்படைத் தேவையானது. அதை நான் செய்ய வேண்டும். நீ எவ்வளவு வலியில் இருக்கிறாய் என்பது எனக்கு முக்கியமல்ல’

The post திருச்சி என்ஐடி-யில் தொடங்கி சிங்கப்பூர், கலிபோர்னியா வரை சூறாவளியாக மாறிய சென்னை தொழிலதிபரின் காதல் திருமண வாழ்க்கை appeared first on Dinakaran.

Read Entire Article