திரிபுரா: வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்; 18 போலீசார் காயம்

1 week ago 5

அகர்தலா,

திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்பு திருத்த சட்டம் வாபஸ் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பத்ருஜ்ஜாமன் தலைமையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று பேரணியாக சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் திடீரென வன்முறையில் இறங்கினர். அவர்கள் காவலர்கள் மீது கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசினர்.

இதில், குப்ஜார் பகுதியில் நடந்த வன்முறையில் கைலாஷாகர் பகுதிக்கான சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 18 போலீசார் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கும்பலை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது. பல்வேறு இடங்களிலும் பொது சொத்துகளை மர்ம கும்பல் சூறையாடியது. வீட்டு உபயோக பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில், பலருக்கு காயம் ஏற்பட்டது.

Read Entire Article