சென்னை: திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிகிறது; திராவிட மாடல் என்றாலே அச்சப்படுகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார். அப்போது; அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். ஆளுநர் வருகிறார்; உரையாற்றாமல் சென்று விடுகிறார் என்பதால் சிறுபிள்ளைத்தனமானது என்றேன். ஆளுநரை பொறுத்தவரை தமிழ்நாடு சட்டமன்றம் விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறது.
ஆளுநர் வருகிறார், உரையாற்றாமல் போய்விடுகிறார்; அதனால்தான் ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்றேன். திட்டமிட்டு விதிமீறலில் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களைக் கூறி சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றார். பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து, முடியும் போது தேசிய கீதம் பாடுவது வழக்கம். தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை.
The post திராவிட மாடல் என்றாலே சிலருக்கு வயிறு எரிகிறது; திராவிட மாடல் என்றாலே அச்சப்படுகின்றனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.