திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் கடுமையாக கேலி செய்யப்பட்ட காந்தி - ஆளுநர் ரவி சொல்வது என்ன?

1 week ago 2

திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் காந்திஜி தொடர்ந்து கடுமையாக கேலி செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக விமர்சித்துள்ளார். காந்தியை நினைவுகூரும் நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று முதல்வரிடம் தான் பலமுறை விடுத்த கோரிக்கை பிடிவாதமாக மறுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

மகாத்மா காந்தி 78-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியை ஆளுநர் வாசிக்க, பள்ளி மாணவர்கள், அலுவலர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர்.

Read Entire Article