திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

1 hour ago 1

 

ஊட்டி, நவ. 27: இந்திய அரசியல் சாசன சட்டம் சட்ட மேதை அம்பேத்கரால் இயக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திமுக சட்டத்துறை செயலாளர் இளங்கோ எம்பி, நீலகிரி தொகுதி எம்பி ஆ.ராசா ஆகியோரின் வழிகாட்டுதல் படி நீலகிரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரசியல் அமைப்பு தின நிகழ்ச்சி ஊட்டி காக்காதோப்பு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.

வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் சந்திரபோஸ் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அரசியல் சாசன சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றிருந்த கருத்துகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் அரசு வழக்கறிஞர்கள் ஆனந்தன், செந்தில்குமார், சசிக்குமார், முகமது, செல்வராஜ், நகராட்சி வழக்கறிஞர் மேனகா, திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கீர்த்தனா உட்பட ஏராளமான இளம் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

The post திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Read Entire Article