சென்னை: திமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த நிர்வாகிகளை அப்பொறுப்புகளில் இருந்து விடுவித்து, மாற்று பொறுப்பில் நியமித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வந்த ராஜீவ் காந்தி திமுக மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்த எழிலரசன் எம்.எல்.ஏ, திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த பூவை சி.ஜெரால்டு அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவர் அணி இணை செயலாளராக இருந்து வந்த எஸ்.மோகன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுக வர்த்தக அணி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் ஊடக விவதாங்களில் கலந்துகொள்வோருடன், செல்வகணபதி எம்பி, அருண் நேரு எம்பி, தங்க தமிழ்செல்வன் எம்பி, நாக நந்தினி, ராஜா தமிழ்மாறன் ஆகியோர் இணைந்து பங்குபெறுவர் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும், திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் நகரத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ், தேனி வடக்கு மாவட்டம் தேனி நகரைத்தை சேர்ந்த எம்விகே ஜீவா ஆகியோர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சி பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு கட்சி தலைவரிடம் அளித்த வேண்டுகோளை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவித்துள்ளார். சென்னை: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு 44அ வட்டச் செயலாளர் மனோகரன் மரணமடைந்ததால், காலியாக உள்ள பொறுப்புக்கு எஸ்.அருள் நியமிக்கப்படுகிறார் என்றும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
The post திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பு மாற்றம்: கொள்கை பரப்பு செயலாளராக எழிலரசன் எம்.எல்.ஏ. நியமனம் appeared first on Dinakaran.