கிணற்றில் லாரி கவிழ்ந்து 300 நெல் மூட்டைகள் சேதம்

6 hours ago 3

 

செஞ்சி, மார்ச் 13: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் உள்ள கிணற்றில் லாரி கவிழ்ந்து 300 மூட்டைகள் நெல் தண்ணீரில் நனைந்து சேதமானது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மார்க்கெட் கமிட்டி உள்ளது. இங்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் நெல் உள்ளிட்ட தானியங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இங்குள்ள நவீன குடோனில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி கமிட்டி வளாகத்தில் உள்ள கிணற்றின் ஓரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபோது கிணற்றின் தடுப்பு சுவர் இடிந்து லாரி தண்ணீரில் கவிழ்ந்து கிடந்தது. இதில் லாரியில் இருந்த 300 நெல் மூட்டைகளும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இதில் எந்தவித உயிர் சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post கிணற்றில் லாரி கவிழ்ந்து 300 நெல் மூட்டைகள் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article