திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 13: திருவெண்ணெய்நல்லூர் அருகே அமைச்சர் மீது சேற்றை வீசிய வழக்கில் பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் மலட்டாறு கரையோரமாக உள்ள திருவெண்ணெய்நல்லூர், அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இடத்தை கடந்த டிசம்பர் 3ந்தேதி அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர், முன்னாள் எம்.பி கௌதமசிகாமணி மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்வையிட வந்தனர்.
அப்போது சிலர் அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது சேற்றை அள்ளி வீசினர். இதுகுறித்து தனி பாதுகாப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சேற்றை அள்ளி வீசிய இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராமர் (எ) ராமகிருஷ்ணன், விஜயராணி ஆகிய இருவர் மீதும் காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் வழக்கு பதிவு செய்து கடந்த பிப்ரவரி 21ம் தேதி ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாஜகவை சேர்ந்த விஜயராணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post அமைச்சர் மீது சேற்றை வீசிய வழக்கில் பாஜக பெண் நிர்வாகி கைது appeared first on Dinakaran.