திமுக பாகமுகவர் கூட்டம்

3 hours ago 1

 

சிவகங்கை, பிப்.24: திருப்புவனம் அருகே மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மணலூர், கீழடி, புலியூர், மேலவெள்ளூர், அல்லிநகரம், சங்கங்குளம் ஆகிய இடங்களில் பாகமுகவர், உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தார். மானாமதுரை சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளர் புதுக்கோட்டை போஸ் பாக முகவர்களின் பணி குறித்து பேசினார்.

மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் பேசினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி. திருப்புவனம் பேரூர் செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட பிரதிநிதிகள் ஈஸ்வரன், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ மற்றும் பாக முகவர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

The post திமுக பாகமுகவர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article