திமுக கூட்டணியை உடைக்க முடியாது: ப.சிதம்பரம்

6 months ago 19

காரைக்குடி,

காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக கூட்டணியை உடைக்க முடியாது; தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. யாரும் உடைக்கவோ, கலைக்கவோ முடியாது. 2026 சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை திருத்த அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அதற்கு மக்களவை. மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை வேண்டும். பாஜக வுக்கு இரு அவையிலும் பெரும்பான்மை இல்லாததால், சட்ட மசோதா கொண்டுவந்தால் தோற்கடிப்போம். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article